நாளை தொடங்கும் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து யானைகள் புறப்பட்டு சென்றன.
திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு தமிழக அரசு நடத்தும் நல வாழ்வு முகாம் நாளை தொடங்குகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் இந்த புத்துணர்வு முகாமுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து கோயில் யானைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. திருச்சி ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து ஆண்டாள் என்ற யானையும், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து லஷ்மி என்ற யானையும், முகாமிற்கு புறப்பட்டு சென்றன. இதே போல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பார்வதி என்ற யானையும், அழகர் கோவிலில் இருந்து சுந்தரவல்லித் தாயார் என்ற யானையும், விருதுநகர் பராசக்தி வெயில் உகந்த அம்மன் கோயிலில் இருந்து சுலோச்சனா என்ற யானையும் முகாமிற்கு புறப்பட்டுச் சென்றது.