பயோடெரரிசம்

எந்த உயிரினமும் தன் வாழ்க்கை முறையை தன் வாழ்விடத்தை தானே அழித்துக்கொள்வதில்லை மனிதன் மட்டும்தான் அழித்து கொண்டே இருக்கிறான் இயற்கை எவ்வளவுதான் தாக்குபிடித்து ஈடுகொடுக்கும் ?
          "இனிமேல் மனிதன் அறிவுபெற இயற்கையிடம்தான் திரும்பவேண்டும் என்றார் தாமஸ் பெயின். ஆம் ! இயற்கையின் ஆற்றல் மிகு விதிகளை மாற்ற முயற்சிப்பது வெற்றியைத்தராது என்பது இப்போதுள்ள சூழல் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கு புரிந்திருக்க வேண்டும். புரிந்து கொள்ளவில்லை என்றால், புரிந்து கொள்ளாதவர்களின் செயல்பாட்டால்-இயற்கை அழிப்பு தீவிரவாதத்தால் (பயோடெரரிசம்) உலகமக்கள் வதைபட வேண்டுமா என்ன.
          மக்களே (இளைஞர்களே) உங்கள் பகுதியில் இன்றுமுதல் நெகிழித்தால் (பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்ப்போம், வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை, மக்கும் குப்பை-மக்காத குப்பை என தரம்பிரித்து வெளியோற்றுவோம் நகராட்சி, மாநகராட்சி ஊழிர்களுக்கு உதவி செய்வோம், ஊக்கப்படுத்துவோம்.
-பசுமை நாயகன்