பாரம்பரிய காய்கறி விதைகளை
திருவாரூர் மாவட்டம், 'கிரியேட்’ அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன் பதில் சொல்கிறார்.
''ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர் சேகரித்து வைத்த சொத்துதான், பாரம்பரிய விதைகள். வெளிநாட்டுக்காரர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு நம்மிடம் விதம்விதமான விதைகள் உள்ளன. தமிழ்நாட்டில், சில முன்னோடி இயற்கை விவசாயிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என சிலர் பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதற்காக, அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.
60 நாள்  முதல் 180 நாள் வயது வரை கொண்ட பல நெல் ரகங்கள் எங்கள் கைவசம் உள்ளன. வறட்சியைத் தாங்கி வளரும் ரகம், உப்பு மண்ணில் விளையும் ரகம், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் வளர்பவை... என்று நெல்லில் சுமார் 63 பாரம்பரிய ரகங்கள் உள்ளன. பெரும்பாலும், பாரம்பரிய ரக விதைகளை விலைக்குக் கொடுப்பதில்லை. 'இரண்டு கிலோ விதைநெல் வாங்கினால், அடுத்த ஆண்டு நான்கு கிலோ விதைநெல் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்கிற ஒப்பந்த அடிப்படையில்தான் கொடுத்து வருகிறோம். இன்னும் சொல்லப்போனால், பாரம்பரிய
ரகங்களின் மகத்துவம் புரிந்து, அதை மக்களிடம் பரப்பும் நோக்கம் உடையவர்களுக்குத்தான் கொடுக்கிறோம்.

பாரம்பரிய காய்கறி விதைகளை, முசிறியில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயி யோகநாதன் சேகரித்து வைத்துள்ளார். பொதுவாக, நாம் பச்சை நிறத்தில்தான் வெண்டை பார்த்திருப்போம். நீல வண்ணத்தில் உள்ள வெண்டை ரகம் உள்ளது. கத்திரியில் மட்டும் 16 பாரம்பரிய ரகங்கள் உள்ளன.
பொன்னி கத்திரிக்காய், அதிக விளைச்சல் கொடுக்கக்கூடியது. அதேபோல அதிகளவில் காய்க்கும் குண்டு சுரைக்காய் ரகமும் உள்ளது. தவிர, பீர்க்கன், புடலை, அவரை.... என்று காய்கறிகளில் நல்ல காய்ப்புத் தன்மை கொண்ட ரகங்கள்; பல மாதங்கள் வரை மகசூல் கொடுக்கும் கீரை ரகங்கள்... என நிறைய பாரம்பரிய ரகங்கள் உள்ளன. இந்தக் காய்கறிகளை ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் அளவுக்கு சுவை கொண்டவை.
பாரம்பரிய ரகங்கள் ஒவ்வொன்றும், சிறிய அளவில் மட்டுமே பயிர் செய்யப்பட்டு வந்தன. இவற்றை முறையாக சேகரித்து விவசாயிகளுக்குக் கொடுக்க ஆரம்பித்த பிறகு, நிறைய விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள். இந்த ரகங்கள், 99% அளவுக்கு இயற்கை விவசாய முறையில்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. எனவே, இயற்கை விவசாயம் வளர வளர... பாரம்பரிய ரகங்களும் பெருகி வருகின்றன.''
தொடர்புக்கு, ஜெயராமன், செல்போன்: 94433-20954. யோகநாதன், செல்போன்: 94428-16863.


'கொத்தவரை விதைக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அது எதற்குப் பயன்படுகிறது? விதைக்கென்று தனி ரகம் உண்டா?
கே. வேல்முருகன், லிங்கநாயக்கனூர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையத்தின் தேசிய ஆலோசகர் முனைவர். ரவீந்திரன் பதில் சொல்கிறார்.
''எண்ணெய் கிணறுகளைத் துளையிடும் துளைப்பான்களில் உராய்வைத் தடுக்கும் பொருளாக கொத்தவரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். இதனால், வெளிநாடுகளில் கொத்தவரை விதைக்குத் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வடமாநிலங்களில், விதைகள் அதிகம் உள்ள கொத்தவரை ரகத்தை, அதிக அளவில் சாகுபடி செய்கிறார்கள். தற்போது, கரூர் பகுதியில் இந்த ரகத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். வழக்கமாக நாம் காய்கறிக்குப் பயன்படுத்தும் ரகத்திலும் விதை இருக்கும் என்றாலும், இந்த ரகம் கூடுதல் விதைகளோடு, மகசூலும் கொடுக்கக்கூடியது. ஏக்கருக்கு 30 டன் வரை விளைச்சல் கிடைக்கும். நமது காய்கறி ரகத்தில் 15 டன் வரைதான் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் உள்ள மண்டியில், கொத்தவரை விதைகளைக் கொள்முதல் செய்து, ராஜஸ்தான், ஹரியானா போன்ற  மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த மாநிலங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. கடந்த ஆண்டை விட தற்போது சாகுபடிப் பரப்பு அதிகரித்து விட்டதால்... விலையும் இறங்கி விட்டது. கடந்த ஆண்டு, ஒரு குவிண்டால் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது,
6 ஆயிரம் ரூபாய் அளவில்தான் விற்பனையாகிறது. இன்னும்கூட விலை இறங்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, எச்சரிக்கையுடன் பயிர் செய்யவும்.''
தொடர்புக்கு: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், தொலைபேசி: 0422-2431405.

இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

பசுமை நாயகன் Pasumai Nayagan

                    வானகம் - நிரந்தர வேளாண் பண்ணையில்
( சுவரில்லா கல்வி ) 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

நாள் : நவம்பர் 12.11.13 செவ்வாய் காலை 9 மணி முதல் 14.11.13 வியாழன் மாலை 5 மணி வரை

இடம் : வானகம், கடவூர், சுருமான்பட்டி, கரூர் மாவட்டம்

முன்பதிவு செய்ய : 94880 55546, 98431 27804 , 94435 75431

பயிற்சி நன்கொடை : ரூ.1200/- மட்டும் . தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

முன்பதிவு & பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :

Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Bank Contact No : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in
( அல்லது )

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய
மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311

பயிற்சியில் :

1. இயற்கை வேளாண்மையின் அவசியமும் , மரம் வளர்ப்பு பயிற்சியும்
2. நிரந்தர வேளாண்மையை எப்படி செலவில்லாமல் செய்வது பற்றியும்..
3. பஞ்சகாவியா, மீன்அமிலம், பூச்சுவிரட்டி தயாரிப்பு பற்றியும்,
4. மருந்தில்லா மருத்துவம் பற்றியும்,
5. சிறு தானியங்களின் அவசியம் பற்றியும்,
6. வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் பற்றியும்,
7. சுற்றுசுழல் பராமரிப்பும், அதன் தேவையும்,
8. சுய சார்பு வாழ்வியல் கல்வியும்,
9. தின்னைப் பேச்சு பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

இவை அனைத்தும் நேரடி களப் பயிற்சிகளே.. உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை ( உயிர் கருவை ) உயிர்பிக்க காத்துக் கொண்டிருக்கிறார் இயற்கை வாழ்வியல் நிபுணர் “ கோ. நம்மாழ்வார் “..

இன்னும் விதை தேவை, விதைகளை சேகரிப்போம். நேர்த்தியான விதையாய் மாறுவோம்.

அடுத்த பயிற்சிக்கும் சற்றும் சிந்திக்காமல் தயாராகுங்கள்.

வாழ்க இயற்கை! வாழ்க இயற்கை வேளாண்மை!!

வானகம் வருவதற்கு வழி :
திருச்சி ( அல்லது ) கரூர் ( அல்லது ) திண்டுக்கல் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 50 முதல் 60 கி.மீ தொலைவில் கடவூர் அருகில் உள்ளது.

தந்தையும் மகனும் ஒரே மேடையில் முனைவர் பட்டம்     ந்தையும் மகனும் ஒரே மேடையில் முனைவர் பட்டம் பெறுவது, பெருமிதத்திற்குரியது மட்டுமல்ல, நெகிழ்ச்சியான விஷயமும் கூட. இத்தகைய ஒரு நிகழ்வு திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அரங்கேறியது.
  பட்டம் பெற வந்தவர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்திய அந்த தந்தை மகனை பற்றிய கதை இது.
  திருச்சி மாவட்டம், தென்றல் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு தற்போது 65 வயது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ள இவர், பல்வேறு பட்டங்களையும், சிறப்பு ஆசிரியருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
   சுப்பிரமணியனுக்கு மனைவியுடன் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். குலதெய்வ வழிபாடு குறித்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை கட்டுரையாக சமர்ப்பித்து தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார் சுப்ரமணியன்.
 


"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னூற்றான் கொல்" 
     எனும் சொல் என்ற மறை வாக்கிற்கு ஏற்ப இவரது மகன் கொளஞ்சி கண்ணன் அணுத் துகள் ஆராய்ச்சியை எட்டு ஆண்டுகள் மேற்கொண்டு கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
   ஆய்வு செய்யும் ஊக்கத்தை தந்தையின் விடாமுயற்சியைக் கண்டே வளர்த்துக் கொண்டதாக கூறுகிறார் கண்ணன். இத்தகைய மகனையும், கணவனையும் அடைந்தது குறித்து பெருமிதம் அடைவதாக கூறியிருக்கிறார் சுப்பிரமணியனின் மனைவி.
           பாரதிதாசன் பல்கலை.யில் நெகிழ்ச்சி:
    பட்டமளிப்பு விழா என்றாலே பொதுவாக அவ்விடத்தில் உற்சாகத்திற்கு பஞ்சமிருக்காது. அதிலும் தந்தையும் மகனும் ஒரே மேடையில் பட்டம் பெறும் அதிசயத்தில் அனைவருமே வியந்து பாராட்டியதும் அரங்கேறியது. நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கலந்த அனுபவமாக இந்த பட்டமளிப்பு விழா மாறியது.


பணத்தை எளிதாக டெபாசிட் செய்ய வசதியாக சிடிஎம் (CDM)-- SBI


Cash deposit machine at SBI     பணத்தை எளிதாக டெபாசிட் செய்ய வசதியாக சிடிஎம் (CDM) எனப்படும் பண டெபாசிட் இயந்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி அமைக்க உள்ளது.
  திருச்சியில் சமூக நல பணிக்கு உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற, வங்கியின் தேசிய பிரிவு நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் இதைத் தெரிவித்தார்.
   வரும் நிதியாண்டில் 550 புதிய கிளைகளை தங்கள் வங்கி திறக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். கிங்ஃபிஷர் நிறுவனம் பாக்கி வைத்துள்ள 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை வசூலிக்க 17 வங்கிகள் இணைந்து ஆலோசனை நடத்துவதாக அவர் கூறினார்.
   முதல்கட்டமாக மும்பை மற்றும் கோவாவில் உள்ள கிங்ஃபிஷருக்கு சொந்தமான 120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவை கடன் மதிப்புடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
          சிடிஎம் பயன்படுத்துவது எப்படி? 
 
    பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 49 ஆயிரத்து 900 ரூபாய் டெபாசிட் செய்ய முடியும்; அதிகபட்சம் 200 எண்ணிக்கையிலான நோட்டுகளை ஒரு முறை பயன்படுத்த வேண்டும். 100, 500,1000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே, இயந்திரத்தில் போட வேண்டும். 
பணம் செலுத்தியவுடன், கணக்கு நிலவரத்தை இயந்திர திரையில் காணலாம். இச்சேவையை பயன்படுத்த ஏ.டி.எம்., கார்டுகள் இருக்க வேண்டும்.


ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்க வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள்


   மிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். கர்நாடக அரசின் நடவடிக்கைகளால், காவிரிப் பாசன பகுதிகளும் கூட, சமீபத்திய ஆண்டுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையில் தத்தளிக்கின்றன. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு கை கொடுக்கும் என்று வழிகாட்டியிருக்கிறது திருச்சி வேளாண் கண்காட்சி.
  புதிய தலைமுறை சார்பில் திருச்சியில் நடத்தப்படும் வேளாண் கண்காட்சியில் விவசாயிகளின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தவற்றில் ஒன்று ஆடு வளர்ப்பு. தலைச்சேரி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போயர் ஆகிய ரக ஆடுகள் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்தில் 300 ஆடுகள் வரை வளர்க்கலாம். நிலத்தின் ஒரு பகுதியில் ஆடுகளுக்கான பட்டியை உருவாக்கிவிட்டு, மற்றொரு பகுதியில் ஆடுகளுக்கான பசுந்தீவனத்தை பயிரிடலாம். 3 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்கினால், ஆண்டுதோறும் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என இந்த கண்காட்சியில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
"விளக்கம் நம்பிக்கை தந்தது":ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்க வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் தரப்பட்டது. ஆடு வளர்ப்பு குறித்து கண்காட்சியில் தரப்பட்ட தகவல்கள் பயனுள்ளதாக இருந்ததாகவும், விரைவில் ஆடு வளர்க்கும் பண்ணை தொடங்கப் போவதாகவும் அதனைப் பார்வையிட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
வங்கிகளில் கடன் பெறலாம்: தமிழகத்தில், கோவை, திருப்பூர், தாராபுரம், கோவில்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே ஆடு வளர்ப்பு தொழில் லாபகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
  தற்போது, தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரிப் பாசன பகுதிகளிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு தாண்டவமாடுவதால் ஆடு வளர்ப்பது விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சிறந்த தொழிலாக இருக்கும் என கண்காட்சியை பார்வையிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடு வளர்ப்பது குறித்து கண்காட்சியில் விளக்கம் பெற்றுச் சென்றனர்.
                               -இணைய செய்தியாளர் - s.குருஜி

புதிய தலைமுறை சார்பில் திருச்சியில் நடத்தப்படும் வேளாண் கண்காட்சி