பணத்தை எளிதாக டெபாசிட் செய்ய வசதியாக சிடிஎம் (CDM)-- SBI


Cash deposit machine at SBI     பணத்தை எளிதாக டெபாசிட் செய்ய வசதியாக சிடிஎம் (CDM) எனப்படும் பண டெபாசிட் இயந்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி அமைக்க உள்ளது.
  திருச்சியில் சமூக நல பணிக்கு உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற, வங்கியின் தேசிய பிரிவு நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் இதைத் தெரிவித்தார்.
   வரும் நிதியாண்டில் 550 புதிய கிளைகளை தங்கள் வங்கி திறக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். கிங்ஃபிஷர் நிறுவனம் பாக்கி வைத்துள்ள 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை வசூலிக்க 17 வங்கிகள் இணைந்து ஆலோசனை நடத்துவதாக அவர் கூறினார்.
   முதல்கட்டமாக மும்பை மற்றும் கோவாவில் உள்ள கிங்ஃபிஷருக்கு சொந்தமான 120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவை கடன் மதிப்புடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
          சிடிஎம் பயன்படுத்துவது எப்படி? 
 
    பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 49 ஆயிரத்து 900 ரூபாய் டெபாசிட் செய்ய முடியும்; அதிகபட்சம் 200 எண்ணிக்கையிலான நோட்டுகளை ஒரு முறை பயன்படுத்த வேண்டும். 100, 500,1000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே, இயந்திரத்தில் போட வேண்டும். 
பணம் செலுத்தியவுடன், கணக்கு நிலவரத்தை இயந்திர திரையில் காணலாம். இச்சேவையை பயன்படுத்த ஏ.டி.எம்., கார்டுகள் இருக்க வேண்டும்.