திருச்சி ஐ.ஐ.எம்., கிளை சென்னையில் திறப்பு

      திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் கிளை நிறுவன அலுவலகம் சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்திய மேலாண்மை நிறுவனங்கள் இதுவரை 13 இடங்களில் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சமீப காலமாக ஐ.ஐ.எம்., நிறுவனங்களின் கிளைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. கொச்சி ஐ.ஐ.எம்.,-ன் கிளை திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக திருச்சி ஐ.ஐ.எம்., நிறுவனத்தின் கிளை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் திருச்சி ஐ.ஐ.எம்., டீன் கோபால், தலைவர் எம். தாமோதரன், இயக்குநர் டாக்டர். பிரஃபுல்லா அக்னிஹோத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் ஸ்ரீதர் கலந்து கொண்டார்.