அரியமங்கலம் காமராஜர் தெருவை சேர்ந்த ஷேக் தாவூத், கதீஜா பீவி
தம்பதியரின் மகளான தஸ்பீகா பானு என்ற அந்த குழந்தை மின்வெட்டு நேரத்தில்
வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தாள். வெகுநேரமாகியும் குழந்தை
வீட்டுக்குள் வராததால் பதற்றமடைந்த பெற்றோர் தேடியபோது, அருகில் புதிதாக
கட்டப்பட்ட வீட்டில் தரையோடு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிக்குள்
குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக
தெரியவந்தது. இதே பகுதியில் இரு தினங்களுக்கு முன் மின்வெட்டை கண்டித்து
திருச்சி தங்சை நெடுஞ்சாலையில் மறியல் நடந்ததால் போக்குவரத்து 2
மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
-இணைய செய்தியாளர் : S.குரு