திருச்சி
மாவட்டம் லால்குடி அருகே திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின்,
சகோதரருக்குச் சொந்தமான அரிசி ஆலையின் ஒரு பகுதியை அதிகாரிகள் இடித்துத்
தள்ளினர்.
ஆக்கிரமிப்பு நிலத்தில் அரிசிஆலையை கட்டியதாக வந்த புகாரின் பேரில்,
பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து இந்த
நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நேருவின் சகோதரர் மணிவண்ணனுக்குச் சொந்தமான அரிசி ஆலை பூவாளூரில்
உள்ளது. திருச்சி – அரியலூர் நெடுஞ்சாலையில் சாலையில் உள்ள இந்த ஆலையின்
ஒரு பகுதி, ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை
அதிகாரிகளும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் அரிசி ஆலையில் ஆய்வு
செய்தனர்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி