புதிய நடைமுறையால் செல்ஃபோன் கட்டணம் உயரலாம்

   ஸ்பெக்ட்ரம் எனப்படும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான அலைவரிசை ஒதுக்கீட்டில், தொலைத் தொடர்பு கமிஷனின் புதிய நடைமுறையால் செல்ஃபோன் கட்டணம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை, ஆயிரத்து 800 மெஹாஹெட்ஸ் அலைவரிசையில் தொலைபேசி நிறுவனங்களுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதை 900 மெஹாஹெட்ஸ் அளவில் மாற்றியமைக்க, இந்திய தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்தது.
உரிமத்தை புதுப்பிக்க 2014 நவம்பர் வரை அவகாசம் உள்ள நிலையில், அதற்கு 24 மாதங்கள் முன்னதாக ஏலம் நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் டெல்லி மற்றும் மும்பையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான முதல் ஏலம் நடக்க உள்ள சூழ்நிலையில், இந்தப் புதிய நடைமுறையால் செல்ஃபோன் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.